லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2013

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்.


லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை
விரைந்து செய்ய, தொடக்க கல்வித்துறையினர் தயாராகி வருகின்றனர். லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமைஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து, ஒவ்வொரு வட்டார தொடக்க கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளாதா?எந்த மாதிரியான கட்டடம், மராமத்து பணி தேவையா என்பது குறித்து விளக்கமும்பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் கேள்விக்கு ஆசிரியர்கள் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்துள்ளனர். ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் கமிஷன் கேள்விகள் கேட்டு உள்ளது. ஜனவரிக்குள், பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கு பள்ளிகளை தொடக்க கல்வித்துறையினர் தயார்படுத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி