குரூப் 2 தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

குரூப் 2 தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா.


டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வில் ஆயிரம் பேருக்கு மேல், எழுதும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை
கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பேசியதாவது:"டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வு டிச.,1ல் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 38 மையங்களில் 10,609 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், திண்டுக்கலில் 24 மையங்களில் 8,500 பேரும், பழநியில் 14 மையங்களில் 2,109 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வுகளை கண்காணிக்க 60 முதன்மை கண்காணிப்பாளர்கள், 531 கண்காணிப்பாளர்கள், 12 நடமாடும் குழுக்கள், 40 வீடியோகிராபர்கள், 5 பறக்கும் படையினர் என, மொத்தம் 648 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஆயிரம் பேருக்கு மேல், தேர்வு எழுதும் மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தேர்வு நாளன்று காலை 9 முதல் 2 மணி வரை தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும். மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி