குரூப் - 2 தேர்வு எழுத, மதுரையைச் சேர்ந்த, திருநங்கைக்கு, ஹால் டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.மதுரையைச் சேர்ந்த,
சொப்னா, செல்வி, கிரேஷ் பானு உள்ளிட்ட, ஐந்து திருநங்கைகள்,உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருநங்கைகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 3 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும். குரூப்-2 தேர்வு எழுத சொப்னாவுக்கு இதுவரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. அவரை, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டது.இம்மனு, தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், வழக்கறிஞர் நிறைமதி ஆஜராகி, தேர்வு எழுத அனுமதித்து, சொப்னாவுக்கு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான நகலை தாக்கல் செய்கிறேன், என்றார்.இதையடுத்து, பிரதான மனுவுக்குப் பதிலளிக்க, அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.விசாரணையை, டிச., 18ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.
thiunangaikalukkum sama urimai alikkappada vendum avangalum manithargak thane
ReplyDelete