பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல் 30ம் தேதி வரை இணையதளத்தில் இருந்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.இயக்குனர், தேவராஜன் அறிவிப்பு:
செப்டம்பர், அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவிற்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு, மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அவர்கள், www.examsonline.co.inஎன்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவுஎண், பிறந்த தேதி மற்றும் தனி தேர்வு மதிப்பெண் சான்றிதழில் உள்ள குறியீட்டு எண்ணை பதிவு செய்து, விடைத்தாளை, பதிவிறக்கம் செய்யலாம்.மறுகூட்டல் முடிவுகள், விரைவில் வெளியிடப்படும். விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யும் தேர்வர்கள், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் செய்ய விரும்பினால்,www.tndge.inஎன்ற இணையதளத்தில், இன்று முதல், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், உரிய கட்டணத்தையும் சேர்த்து, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், டிச., 2, 3 தேதிகளில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தை, ரொக்கமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி