499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இயக்குநர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனு தாக்கல்.


பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து
பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு இதுகுறித்த பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் 499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும், இதுகுறித்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி