8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2013

8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.


8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இந்த திட்டம்
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.இந்த தேர்வை 7 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி