பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2013

பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு.


மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும்,
கவுன்சிலிங் மையங்களை நிறுவ வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கல்லூரி கல்வி இயக்குனரகத்தைச் சேர்ந்த, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து பள்ளி, கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள், செயலர்கள் ஆகியோருக்கு, சமீபத்தில், ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளோம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும், தங்களது நிறுவனத்தில், மனநல நிபுணராக பணியாற்ற, ஒரு ஆசிரியரை பரிந்துரை செய்ய வேண்டும்; அவர், மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்குவதுடன், கவுன்சிலிங் செய்பவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.இப்படி, தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, பெங்களூரு, "நிம்கன்ஸ்" மருத்துவமனை, மனநல ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் அளிப்பது குறித்து பயிற்சியை அளிக்கும். இதற்கான பயிற்சி மையங்கள், வரும் பிப்ரவரியில் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, மாவட்ட வாரியாக, நடமாடும் மனநல ஆலோசனை மையத்தை அமைத்து, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் 10 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மாவட்ட வாரியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு, கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மனநல ஆலோசனை மையம், தற்போது, இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பள்ளி, கல்லூரிகளில் மூத்த ஆசிரியர் தலைமையில், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவர்கள், கல்வி நிறுவன வளாகங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும்போது, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு உரிய நடவடிக்கையை எடுக்கும்.தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகமும், தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு, சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது."மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அளிக்கவும், மாணவர்களை ஒழுங்குபடுத்தும் வகையில் உரிய கவுன்சிலிங்கை அளிக்கவும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், "மனநல பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர் விவரங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்" எனவும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை, பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி