சமீப காலமாக, பள்ளி, கல்லூரிவளாகங்களில், மாணவர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது போன்ற, படுபயங்கரமான செயல்களில்
ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு, உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.பெங்களூரு தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்கன்ஸ்) இந்த பயிற்சியை அளிக்கிறது. கடந்த ஆண்டு, சென்னை, பாரிமுனையில் உள்ள ஒரு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவனால் ஆசிரியை ஒருவர், குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி முதல்வரை, மூன்று மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவமும் தமிழகத்தை உலுக்கியது. தவறான வழியில் பயணிக்கும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி சரியான திசையில் செல்ல நடவடிக்கை எடுத்தாலோ, சரியாக படிக்காதது குறித்து பெற்றோரிடம் புகார் அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டாலோ மாணவர்களுக்கு கோபம் தலைக்கு ஏறி ஆசிரியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.மாணவர்களின் இத்தகைய போக்கால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்வி வளாகத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை, சரியான முறையில் கையாள்வது குறித்தும், அவர்களுக்கு, உளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சியை அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்கன்ஸ்) தமிழக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, மனநலம் குறித்த கலந்தாய்வை நடத்துவது குறித்த பயிற்சியை அளிக்க உள்ளது. இந்த பயிற்சி அடுத்த மாதம் துவங்குகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி