மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தங்களுக்கான கின்டர்கார்டன் சேர்க்கையில், 4 பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120 மாணவர்களை மட்டுமேசேர்க்க வேண்டும் என்று உத்தரவிட,
தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பள்ளி, சிறியதா, பெரியதா? என்பது இந்த கணக்கில் வராது.இந்த புதிய விதி, வரும் 2014-15ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும்என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த புதிய விதிமுறை CBSE மற்றும் ICSE பள்ளிகளை கட்டுப்படுத்தாது."அதேசமயம், சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 12 பிரிவுகள் வரை கொண்டுள்ளன. மேலும், மாணவர்களை கவனிக்க 250 ஆசிரியர்கள் வரை உள்ளதாகவும் அவை கூறுகின்றன.ஆனாலும், ஆபத்து என்று வரும்போது எதுவும் நிகழலாம். எனவே, எங்களால் எந்தவித ரிஸ்க்கும் எடுக்க முடியாது" என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த புதிய விதிமுறையின்படி, சிறப்பு அனுமதிபெற்ற பள்ளிகள், தங்களின் 5 பிரிவுகளில் 150 மாணவர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம். அதில், 25% சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கானது."தமிழகத்தில் மொத்தம் 5000க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 40% பள்ளிகள், தங்களின் கின்டர்கார்டன் சேர்க்கையில் 150 மாணவர்களுக்கு மேல் சேர்த்துக் கொள்கின்றன. மெட்ரிகுலேஷன் வாரியத்தின் புதிய கின்டர்கார்டன் மாணவர் சேர்க்கை விதிகள், பிற வாரியங்களின் விதிமுறைகளோடு ஒத்துவரவில்லை. இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு ஒவ்வாதது. எந்தப் பள்ளியுமே, மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கப் போவதில்லை. தங்களின் உள்கட்டமைப்பு எந்தளவு அனுமதிக்கிறதோ, அந்தளவு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்" ஒரு தரப்பார் கூறுகின்றனர்."மேலும், இத்தகைய கட்டுப்பாடுகளால், தனியார் பள்ளிகளில் சேர முடியாத மாணவர்கள்,அரசுப் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய நிலையே ஏற்படும். இதனால், ஏற்கனவே, பிரபலமான பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்ப்பதற்கு சிரமப்படும் பெற்றோர்களின் நிலை இன்னும் மோசமாகும்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி