சமூகத்தில் பின்தங்கிய மாணவ,மாணவியர் நலனுக்காக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையங்களை, முதல்வர் ஜெயலலிதா, சென்னை
தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இந்த 9 தொழில் பயிற்சி மையங்களில், 4 தொழில் பயிற்சி மையங்கள் பழங்குடி இனத்தினருக்கானவை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஏழை, எளிய மாணவர்களின் நலனுக்காக ஏற்கனவே 62 அரசு தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.பல்வேறு காரணங்களால் உயர்கல்வியை தொடர இயலாதவர்கள், தொழில் பயிற்சிபெற்று, அதன்மூலம் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும், மாநிலத்தில் திறன்மிகு தொழிலாளர்களின் தேவையினை ஈடு செய்யவும் இத்தகைய அரசு தொழில் பயிற்சி மையங்கள் தேவை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்பயிற்சி மையங்களின் விபரங்கள்
திருவையாறு - தஞ்சை மாவட்டம்
போடி - தேனி மாவட்டம்
அருப்புக்கோட்டை - விருதுநகர் மாவட்டம்
ராதாபுரம் - திருநெல்வேலி மாவட்டம்
வேப்பலோடை - தூத்துக்குடி மாவட்டம்
பழங்குடியினருக்கான மையங்கள்
ஜமுனாமரத்தூர் - திருவண்ணாமலை மாவட்டம்
ஆனைக்கட்டி - கோயம்புத்தூர் மாவட்டம்
கொல்லிமலை - நாமக்கல் மாவட்டம்
கூடலூர் - நீலகிரி மாவட்டம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி