டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான போட்டி தேர்வர்களின் பாதுகாவலனாக இருப்பது நீதிமன்றங்கள்
தான் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் பேசினார்.தேனியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக மகளிர் விரைவு நீதிமன்றம், மாற்று வழி தீர்வு மையம் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமை வகித்து திறந்து வைத்தார். அவர் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான வழக்குகளை, தாமதமின்றி விசாரித்து விரைவாக நீதி வழங்க வேண்டும், என்பதற்காக மகளிர் நீதி மன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 22 மகளிர் நீதிமன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் அளவில் பலத்தை தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும்ஆணுக்கு பெண் சமம்.இதை பயன்படுத்தி பெண்ணை கொடுமை செய்தல், துன்புறுத்தல் போன்ற நிகழ்வுகள் நடக்க கூடாது. இந்த மகளிர் நீதிமன்றத்திற்கு, 117 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் திருமணத்தை, விழிப்புணர்வு மூலம் தான் தடுக்க முடியும். ஐந்து நீதிபதிகள் பார்க்கும் வழக்குகளை இன்று ஒரு நீதிபதி பார்க்கும் நிலை உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி