தலைமை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2013

தலைமை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு.


தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கல்வியாண்டில், தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட
, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பள்ளிகளில், 50 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 50 தொடக்க பள்ளிகளுக்குரிய, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதே போல், 54 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 104 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மேற்காணும், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில், சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், அங்குள்ள 5 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தவிர்த்து, எஞ்சியுள்ள 99 தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு, கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடத்த தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில், சாக்கோட்டைஒன்றியத்தில் உள்ள காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்க பள்ளி, பொய்யாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, தலைமை ஆசிரியருக்குரியகவுன்சிலிங், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்அலுவலகத்தில் நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி