இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாததால் மாணவர்கள்...பாதிப்பு கிராமப்புறங்களில் கல்வித்திறன் பாதிக்கும் நிலை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2013

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாததால் மாணவர்கள்...பாதிப்பு கிராமப்புறங்களில் கல்வித்திறன் பாதிக்கும் நிலை.


குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள 13 துவக்க பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால்,
மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.குஜிலியம்பாறை ஒன்றியத்தில், 98 அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில், குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கான ஆசிரியர் கலந்தாய்வு, ஆசிரியர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்டு, கடந்த மாதம் நடந்தது.இதில், தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிக்கு, மற்ற பகுதிகளில் இருந்து பணி மாறுதல் பெற்று, பணிக்கு வரக்கூடிய ஆசிரியர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தவில்லை.இதனால், சுப்பிரமணியபிள்ளையூர், வடுகம்பாடி, காச்சக்காரன்பட்டி, உக்குவார்பட்டி, ரெங்கபாளையம் புதூர், பல்லாநத்தம் உள்ளிட்ட, 13 துவக்க பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சுப்பிமணியபிள்ளையூர், பல்லாநத்தம், வடுகம்பாடி உள்ளிட்ட பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, 60 மாணவர்களுக்கு மேல் இருந்தும், ஒரே ஆசிரியர்தான் பணியில் உள்ளார். ஆனால், நாகுல்பட்டி, உ.தாதனூர், ஐயம்பட்டி உள்ளிட்ட பள்ளிகளில், 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தும், இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.அரசு பள்ளிகளில், சமீப காலமாக, மாணவர் சேர்க்கை என்பது வெகுவாக குறைந்து வரும்நிலையில், அசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய, மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி