வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கல்வித்துறையில் இரவு காவலர், துப்புரவாளர், "லேப் அசிஸ்டென்ட்', ஆகிய பணிக்கு, 6 மாதங்களுக்கு முன் நேர்காணல்
நடத்தியும், பணி வழங்கவில்லை,'' என, அடிப்படை உதவியாளர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. பள்ளிகள்,கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள இரவு காவலர், துப்புரவாளர், "லேப் அசிஸ்டென்ட்', பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், பதிவு மூப்பு விபரம் பெற்று, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், கடந்த 6 மாதங்களுக்கு முன், நேர்முக தேர்வு நடந்தது.இதுவரை நேர்முக தேர்வில் தேர்வானோர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. நேர்முக தேர்விற்கு சென்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில், "லேப் அசிஸ்டென்ட்'களாகபணியாற்றுபவர்களுக்கு, 2006க்கு பின், இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை பதவி உயர்வு வழங்கவில்லை, என, அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.இச்சங்க மாநில கூட்டுக்குழு உறுப்பினர் எம்.என்.,கந்தசாமி கூறியதாவது:வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், பதிவு மூப்பு விபரங்களை பெற்று, நேர்முக தேர்வு நடத்தினர். ஆறு மாதங்கள் முடிந்த பின்னும், பணி வழங்காததால், பதிவு மூப்பில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவர். இந்த பணிகளை, நியமிப்பதில், "சிபாரிசு' அதிகளவில்வந்துள்ளதாக தெரிகிறது. அரசு,இதற்கு இடம் தராமல், தகுதியுள்ளவர்களுக்கு பணி வழங்கவேண்டும். இது குறித்து, சட்டசபை மதிப்பீட்டு குழுவிடம், புகார் மனு கொடுத்துள்ளோம். அவர்கள், அரசின் பார்வைக்கு கொண்டு செல்வதாக கூறினர், என்றார். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரவு காவலர், துப்புரவாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, நேர்முக தேர்வு நடத்தியதற்கான, விபரங்களை அரசுக்கு அனுப்பியுள்ளோம். அரசின், கொள்கை முடிவில், இந்த ஆவணங்கள் இருப்பதால், எந்த மாவட்டங்களிலும், பணியிடங்கள் நிரப்பவில்லை. அரசு இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும், என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி