டி.என்.பி.எஸ்.சி. ஊழியருக்கு சிறப்பு யோகா வகுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2013

டி.என்.பி.எஸ்.சி. ஊழியருக்கு சிறப்பு யோகா வகுப்பு.


சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர்களுக்கு ராயபுரம் மனவளக்கலை மன்றம் சார்பில் 18 நாள் யோகா, தியானப் பயிற்சி அளிக்கப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள்
உற்சாகமாகப் பணிபுரியவும், அவர்களின் மனஅழுத்தத்தைப் போக்கவும் யோகா, பிராணாயாமம் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்கிறது. சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் சுமார் 500 பேர் பணியாற்றுகின்றனர்.ஊழியர்கள் மனஅழுத்தம் இல்லாமல் உற்சாகமாக பணி யாற்றும் வகையில் அவர்களுக்கு மனவளக்கலை என்ற சிறப்பு யோகா பயிற்சி அளிக்க டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் திட்டமிட்டார். ஊழியர்களுக்கு குறைந்த கட்ட ணத்தில் பயிற்சி அளிக்க உலக சமூக சேவா மையமும் முன்வந்தது.

சிறப்பு யோகா பயிற்சி

அணி அணியாக பிரித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் அணிக்கான பயிற்சி தற்போது நடந்து வருகிறது. அலுவலக வேலைநாட்களில் தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் எளிய உடல்பயிற்சி, தியானம், பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), காயகல்பம், அகத்தாய்வு பயிற்சி என 5விதமான பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன.

ஊழியர்கள் ஆர்வம்

சென்னையில் உள்ள உலக சமூக சேவா மையத்தின் யோகா மாஸ்டர்கள் 3 பேர் தினமும் வந்து பயிற்சி அளிக்கின்றனர். இதில் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். அலுவலகத்தின் 6-வது மாடியில் உள்ள விசாலமான கலையரங்கத்தில் அமைதியான சூழலில் இந்தப் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பது இதுவே முதல்முறை. முதல் அணியில் 62 பேர்பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி வரும் 22-ம் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு 2-வது அணிக்கு பயிற்சி தொடங்கும்.

சான்றிதழ்

பயிற்சியை முடிப்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன் அவர்களின் அனுபவங்களும், பயிற்சியினால் ஏற்படும் விளைவு களும் ஆய்வு செய்யப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி