தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது. நாட்டில் உள்ள
பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொலை தூர கல்வி, திறந்த நிலை கல்வி முறைகளில் பட்டங்களை வழங்கி வருகின்றன. அடிப்படை கல்வி முடித்தவர்களும், இந்த முறைகளில் பயி?ன்று பட்டதாரியாக உயர்த்துள்ளனர். இதில், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர்.திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறையில் பட்டங்களை பெற்று பணியாற்றுவோர், தாங்கள் பட்டதாரிகள் என்பதால், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், இவ்வகையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் பெற்ற பட்டங்களுக்கு சமமானது அல்ல என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, இவ்வகை பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமானது என, யு.ஜி.சி., தெளிவுபடுத்திஉள்ளது. இதுகுறித்து, நாடெங்கிலும்உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல்கலைக் கழகங்கள் திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறைகளில் பட்டம், பட்டய படிப்புகளை நடத்தி, அதற்கான சான்றுகளை வழங்கியுள்ளன.இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறையில் பெறப்படும் பட்டங்களுக்கு சமமானவை என, யு.ஜி.சி., ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. என்றாலும், சில இடங்களில்இது குறித்த சர்ச்சை நீடிப்பதால், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமான பட்டங்களே என, மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அவர்கள் பெற்ற பட்டங்களும் அங்கீகரிக்கப்படும் என, அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி