தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களை, பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,'' என,
அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் வலியுறுத்தினார்.
மதுரையில், 9 மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் (மதுரை) பார்வதி முன்னிலை வகித்தார். நாகராஜ முருகன் பேசியதாவது: மாநிலம் முழுவதும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்தும் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இடைநிற்றல் மாணவர்கள் விவரம் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் மாணவர்களின் அடைவுதிறனை மேம்படுத்த கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், எஸ்.எஸ்.ஏ., திட்ட ஆசிரியர்கள் சம்பளம், காலிப் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மாநில திட்ட ஆலோசகர் சபரிநாதன், சி.இ.ஓ.,க்கள் ராஜேந்திரன் (தேனி), சகுந்தலா (ராமநாதபுரம்),கணேசமூர்த்தி (சிவகங்கை) சுவாமிநாதன் (விருதுநகர்), சரோஜா (தூத்துக்குடி), கஸ்தூரிபாய் (நெல்லை), முருகன் (கன்னியாகுமரி), கலாவள்ளி (பெரம்பலூர்) ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி