ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்ற மகளிரணி கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மகளிரணி அமைப்பாளர் மதனா, மாவட்டத் துணைத்தலைவர் ஆனந்தராசு, பொருளாளர் அருண் ராபின்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஆங்கில வழிக் கல்வி திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆசிர்யர் பணிக்கான தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்த வேண்டும் ஆகியவை உள்பட, 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 24ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் பட்டினி போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உள்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Thaguthi thervu vendam. aana mathiya arasuku inaiyana sambalam vendum.
ReplyDeleteI like that..superla..