ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி கோரிக்கை.


ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்ற மகளிரணி கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மகளிரணி அமைப்பாளர் மதனா, மாவட்டத் துணைத்தலைவர் ஆனந்தராசு, பொருளாளர் அருண் ராபின்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஆங்கில வழிக் கல்வி திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆசிர்யர் பணிக்கான தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்த வேண்டும் ஆகியவை உள்பட, 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 24ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் பட்டினி போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உள்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comment:

  1. Thaguthi thervu vendam. aana mathiya arasuku inaiyana sambalam vendum.
    I like that..superla..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி