சென்னை மாநகராட்சி பள்ளிகளில், போலி சான்றிதழ் கொடுத்துஆசிரியர் பணி பெற்றதாக, எட்டு பேர் மீது புகார் அளிக்கப்பட நிலையில், நேற்று முன்தினம்,
இருவர் கைது செய்யப்பட்டனர். மற்ற ஆறு பேர், தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.சென்னை மாநகராட்சி பள்ளிகளில், போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணி பெற்றது தொடர்பாக, சென்னை எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் பணியாற்றி வந்த குப்பன், 48, மற்றும் ராஜா,40, ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில், தொடர்புடைய, மேலும் ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இவர்கள் அனைவரும், சென்னை, பட்டேல் நகர், கே.கே.நகர், சி.பி.ரோடு, ஏழு கிணறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தலைமறைவாக உள்ளதால், கைது செய்யும் நடவடிக்கையில்மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.அவர்கள் பிடிபடும் பட்சத்தில், போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணிக்கு சேர்ந்த கும்பல் குறித்து முழு தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
what is this
ReplyDelete