விருதுநகரில் நவ.,16ல்நடக்கும் குரூப் 8 தேர்வை 1,480 பேர் இரண்டு மையங்களில் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
மூலம் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 4க்கான இத்தேர்வு விருதுநகரில் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.வி.எஸ். மெட்ரிக். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையங்களில் நவ.,16 காலை 10 மணி முதல் பகல் 1 மணி, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.தேர்வை நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ.,முனுசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்ஜெயக்குமார், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.தேர்வு மையங்களை கண்காணிக்க 4 முதன்மை கண்காணிப்பாளர்கள், 74 தேர்வு கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் ஒரு மொபைல் பார்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுத வசதி செய்து தருவது, தேர்வு நடைமுறைகளை வீடியோ கேமராவில் பதிவு செய்வது, அரசு கூடுதல் பஸ்களை இயக்குவது, தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி