அண்ணாமலைப் பல்கலை: இனி அரசு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2013

அண்ணாமலைப் பல்கலை: இனி அரசு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து
பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை கூறியது:

அண்ணாமலைப் பலகலைக்கழகச் சட்டம் 2013-ன் படி, வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தின் தொழிற்படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை (தமிழ்நாடுஅட்மிஷன் இன் புரஃபஷனல் எஜிகேஷனல் இன்ஸ்ட்டியுஷன்ஸ் ஆக்ட் 2006-ன் படி) தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும்.இனிமேல் பல்கலைக்கழக அனுமதிச் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கிடையாது. மேலும் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி