பள்ளி, கல்லூரி விடுதிகளில், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை ஆய்வு மூலம் உறுதிசெய்ய, கலெக்டர்களுக்கு அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது.சில அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், அதனால், மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், அரசுக்கு தொடர்புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, அவர்களது மேற்பார்வையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான குழுவினர், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள விடுதிகளின் சமையலறை, உணவு சமைக்கப்படும் விதம், சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வர். அவற்றில் குறைபாடு இருந்தால் அதை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துவர்.குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குறைபாடு சரிசெய்யப்படவில்லை எனில் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியருக்கு தரமான, சுகாதாரமான உணவு கிடைக்கவே, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி