தமிழகத்தில் 16 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6 மாதமாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் 9 வயது
முதல் 14 வயதிற்குற்பட்ட குழந்தை தொழிலாளர்களை மீட்டு படிக்க வைக்கப்படுகின்றனர். இதற்காக திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல், சேலம், கோவை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உட்பட 16 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும், பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு மூலம் உணவு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.இதனால் தீபாவளியை கூட சந்தோஷமாக கொண்டாட முடியாமல் குழந்தை தொழிலாளர் பள்ளி ஆசிரியர்கள் அவதிப்பட்டுள்ளனர். இது குறித்து திட்ட இயக்குனர்(பொறுப்பு) அறிவழகன் கூறியதாவது:மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், கடந்த 6 மாதமாக சம்பளம் வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி