மசினகுடி அருகே, சிங்காரா ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு
2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இப்பள்ளியை, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர்களின், எண்ணிக்கையை உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதிமக்களின் கோரிக்கையாக உள்ளது.நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள, சிங்காரா மின்நிலையம் பகுதியில், கடந்த 1951ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போது, மின்நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் குழந்தைகள், அங்கு கல்வி பயின்று வந்தனர். நாளடைவில் பணிகள் குறைந்து, அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தால் பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது.தற்போது இங்கு மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தொட்டுள்ளது. இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் என இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். நான்கு மாணவர்கள் மட்டுமே ரெகுலராக வந்து செல்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.நாம் சென்று பார்த்த நாளில், இப்பள்ளிக்கு 4ம் வகுப்பு மாணவி திவ்யா, 5ம் வகுப்பு மாணவன் மணிகண்டன் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களும், சிங்காரா சேர்ந்த மாணவர்கள் இல்லை; 7 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடி பகுதியில் இருந்து, பேருந்தில் வந்து செல்கின்றனர். சிங்காரா பள்ளி நிலவரம் குறித்து, மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி