ஆசிரியர் தகுதித் தேர்வும்-நீதிபதி விதித்த அபராதமும்! தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வும்-நீதிபதி விதித்த அபராதமும்! தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து.


ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த அபராதம் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:

கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில்
குளறுபடி நடைபெற்றதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி நாகமுத்து அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறாரே?

கலைஞர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலை வராக ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிதான் பணியில் இருந்து வருகிறார். அவருக்கு உயர்நீதிமன்றம் அப ராதம் விதித்திருப்பது என்பது அரசுக்கே அவ மானத்தைத் தரக்கூடிய ஒரு தீர்ப்பாகும்.நீதியரசர் தனது தீர்ப்பில், இந்த வழக்கு ஓராண் டாக நிலுவையில் உள்ளது. பலமுறை விசார ணைக்கு வந்தும், தேர்வு வாரியத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. இத னால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளார்.தேர்வு வாரியத் தலைவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது, தனிப்பட்ட ஒரு அதிகாரிக்குக் கண்டனம் அல்ல, அ.தி.மு.க. அரசுக்கே விதிக்கப் பட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்.இந்த வழக்கிலே மாத்திரமல்ல; இரண்டு நாட் களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயச்சந் திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பிலேகூட தங்கள் வேதனை யைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத்தீர்ப்பில், குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.அதை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக்கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரி வாளைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறை பாடுகளைக் களைய காவல்துறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைக் காவல்துறையினர் சரி யாகப் பயன்படுத்தவில்லை.இந்த வழக்கில் காவல்துறையினரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப் பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரிய வில்லை. கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள் நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய் துள்ளனர். காவல்துறையினரின் விசாரணை முழு வதும் வீணாகி விட்டது. உயர்நீதிமன்றம் வைத் திருந்த நம்பிக்கையை காவல்துறையினர் தகர்த்து விட்டனர்.தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க காவல்துறையினர் தவறிவிட்டனர். காவல்துறையினர் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணரவேண்டும். விசாரணையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது.இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம் என்று காவல்துறைபற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தால் உடனே காவல்துறைக்குப் பொறுப் பேற்றுள்ள மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை கொடுத் திருப்பார்கள். ஆனால் இப்போது?

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

17 comments:

  1. poga pa negalum uinga tet examum

    TET RESULT NOV 18 MALATHA VARUM POI YALARUM WORKA PARUGA FRDS W8 PAINTRATHU WAST

    ReplyDelete
    Replies
    1. Election time la oru arikkai vida vaaipu kidaichiduchi pini pedalethutaru, namakku eppa deeba oli kidaikum, thirunal poga poguthe

      Delete
  2. today 11pm tet result vana vedikkai conform.

    ReplyDelete
  3. Amma amavasai naalilthan tet resulta vida solluvaanga,so tomorow chance irukku.

    ReplyDelete
  4. Ada pongaiya intha amavasaikum, pournamikum naduvula intha Tamilnadu mattikitu mulikithu parunga pavam, tntha tet candidate's vida Tamilnadu makkal romba nallavargal
    Ellathaiyum thangurangale

    ReplyDelete
  5. Amavasaikumvarathu ethuku summary thookam kettu web pages parkiringa friends poi deepavali pattasu vedinga avangalum officla illa pandigai leaveku poettanga

    ReplyDelete
    Replies
    1. helooo frds kalviseithiya pakarigala illaya yen tntet resulta pathi yathuma peasamatigariga
      vaga frds w8 paintratha start painuvom vaga


      KALVISEITHI UINGALI TET RESULTUKKAGA WITE PAINA VARAVARIKIRATHU



      RESULT VARATHU VAGA VALAKAM POLA WITE PAINU SAPATAKUDA MUDIYAMA


      SSAGALAM ERUKARA JOB VITTACHU


      ETHA YARUM PURUINCHUKA MATAGA

      JOB ERUINTHA SOLUGA FRDS NA ERODE DIST





      PLZZZZZZZ HELP ME NA B.Sc.,B.Ed(MATHS) ,,,D.T.Ed

      TET MARK 102 FRDS TET RESULT VARATHU EPOTHAIKU WT CAN I DO

      Delete
    2. dear friend'
      unga comment sariyanathu athai appadiye trb numberukku phone panni sollungal or educational minister number net la thedungal neradiyaga avarukku phone panni alungal nangalum help pandrome friend ph number tamilnadu ministers list website ku pongal namma nilaimai puriyattum oru uyir ponalthan action eduppanga sorry friend neenga thavarana mudivu edukka vendam please thappu pannamale saga vendam minister number ku phone pannungal

      Delete
    3. vaindam frd minister yena painuvaga avagala pavam 2.5 yearsla 6 ministers maritaga yarum yathum paina mudiyathu

      YALAM CM MADAM HANDLATHA ERUKU FRDS RESUTL VITARATHU LATE AKARATHU

      ANA ETHU THAPU FRD

      EXAM MUDUINCHU 3 MONTHU OVER

      YENA PAINTRATHU YALA HEADLINE W8 PAINITHA FRD AGANUM ANA MUDIYALA


      JOB ILLAMA KAISTA PATHAROIM FRD YATHUM PAINA MUDIYALA

      Delete
  6. dear friend,
    educational minister ph number 044 25670682
    educational chief secretary sabitha madam ph number 044 25672790
    nan ph panninen action edukiren endru sonnargal irunthalum ellorum panninal seekiram vazhi pirakum friend

    ReplyDelete
  7. Ok, nanum nalaiku call pandren, neenga ellarume call panunga frndr pls.

    ReplyDelete
    Replies
    1. edn secretary officeku cl panathuku trb ku cl pana solranga

      Delete
  8. nanum nalaiku call pandren, neenga ellarume call panunga frndr pls.nallaki namma ellarum senthu 10000 call pannanum

    ReplyDelete
    Replies
    1. valakama soltra line yavathu soluga kalviseithi this week resultnu


      apavathu koincjam manasu sainthosama erukum plz do



      kalviseithi valga
      tntet valga
      trb valga


      tntet exam yaluthuniviga matum saguga(death)
      poga pa negalum uinga TET EXAMUM SRYYYYYY TO SAY TRB IS VERY GUD

      WORK TO TN GOV IN MANY WAY
      BUT TET WRITE STUDENTS WAST OF TIME ENIRGY ALL OF THEM

      Delete
  9. valakama soltra line yavathu soluga kalviseithi this week resultnu


    apavathu koincjam manasu sainthosama erukum plz do



    kalviseithi valga
    tntet valga
    trb valga


    tntet exam yaluthuniviga matum saguga(death)
    poga pa negalum uinga TET EXAMUM SRYYYYYY TO SAY TRB IS VERY GUD

    WORK TO TN GOV IN MANY WAY
    BUT TET WRITE STUDENTS WAST OF TIME ENIRGY ALL OF THEM

    ReplyDelete
  10. tet result pathi onnume teriyala.yedavathu news update pannunga trb............

    ReplyDelete
    Replies
    1. sathiyama soltran tet result varava varathu pa yalarum poi yaruma madu maikalam wite paintrathu wast

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி