ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் விடை குறித்த தேர்வர்களின் விண்ணப்பங்கள் மீது, மீண்டும் ஒரு முறை, டி.ஆர்.பி., ஆய்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் விடை குறித்த தேர்வர்களின் விண்ணப்பங்கள் மீது, மீண்டும் ஒரு முறை, டி.ஆர்.பி., ஆய்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்திற்குள் சென்று, அதிகாரிகளை சந்திப்பது என்பது, சாமானிய காரியம் அல்ல. பாதுகாப்புநிறைந்த
பகுதி என, கூறி, பார்வையாளர்களை, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி விடுவர்.தேர்வில், குளறுபடிகள் நடந்தால், தேர்வர், டி.ஆர்.பி.,க்கு படை எடுத்துவிடுவர்.அவர்களை சமாளிக்கும் வகையில், அலுவலக வாயிலில், பணியாளர் ஒருவரை நியமித்து, தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில், தற்போது, டி.இ.டி., தேர்வில் எழுந்துள்ள பிரச்னைகள் காரணமாக, தேர்வர்கள் ஏராளமானோர், தினமும், டி.ஆர்.பி.,க்கு சென்றபடி உள்ளனர். தற்காலிக விடைகளை வெளியிட்டபோதே, தவறான விடைகளை ஆட்சேபித்து, ஏராளமான தேர்வர்கள், விண்ணப்பம் அளித்தனர். "இதை ஆய்வு செய்து, இறுதி விடைகளை வெளியிடும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., பதிலளித்தது. ஆனால், நவ., 5ம் தேதி வெளியான, டி.இ.டி., தேர்வு முடிவுடன்கூடிய இறுதி விடையில், சரியான விடைகள் பலவற்றுக்கு, உரிய மதிப்பெண் வழங்காதது, தேர்வர்களுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு, சென்றபடி உள்ளனர். தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களைபெற்று, உரிய பதில் அளிப்பதற்கு ஏதுவாக, அலுவலக வாயிலில், குறை கேட்பு மையம் ஒன்றை, டி.ஆர்.பி., அமைத்துள்ளது. இங்குள்ள பணியாளர், தேர்வர்களின்குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறார். சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காதது குறித்தும், சரியான விடை என்பதற்கான ஆதாரங்களையும், விண்ணப்பத்துடன் இணைத்து, தேர்வர்கள் வழங்கி வருகின்றனர். எனவே, இந்த விண்ணப்பங்கள் மீது, மீண்டும் ஒரு முறை, டி.ஆர்.பி., ஆய்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

25 comments:

  1. Nalla visayam.court case nu alaiyarathuku pathila oru nalla mudivai trb yidam ethirparpom.

    ReplyDelete
  2. Gv 2000 bc 10_87% +2 93% D,Ed 67% paper 1 104 ethavadhu vaipu unda?

    ReplyDelete
  3. sir pls help me, i got 89 marks in paper 2.maths edahavathu panna mudiyuma help me.

    ReplyDelete
    Replies
    1. I am Prabu from Madurai. i am also maths i got 88 marks question type C ,psychology question number 29 correct answer is option A)intellectual ability(evidence author subbu reddy in psychology book)and question number 120 answer is A)destruction of wild animal habitats( evidence 8 th std science book first term book (both A and C options are correct). further detail please contact me 8870631288. all are go to TRB office and submit the suggestion with evidence.

      Delete
  4. Paper1 mark 108 weightage 85 seniority 2004 mbc.......................... vaipu unnda?

    ReplyDelete
    Replies
    1. kandippa ungalukku posting undu dont worry sir

      Delete
  5. Sir My Mark 88 Trb Pona Therrvu Unda

    ReplyDelete
  6. friends hereafter no changes in final key just 1 hour before i make a call to trb number,one madam replied and she said hereafter no changes in final key, so dont waste your time better try for next time.IF YOU HAVE STRONG EVIDENCE OF ANSWERS GO TO THE COURT OTHERWISE WASTE ONLY,I ALSO GOT 88 ONLY.

    ReplyDelete
    Replies
    1. Sir Apa En TRB mendu m Aivu Seium Ena Intha Web Sitela Iruku

      Delete
    2. Sir athu dinamalar yesterday vantha news,today 11 am call panen trb sonna pathil hereafter no changes in final key and result,what to do sir I also 88 only

      Delete
  7. Sir My Mark 88 Trb Pona Therrvu Unda..help me...my m/no. is 9486093683

    ReplyDelete
  8. when the trb final list will be published

    ReplyDelete
  9. 2012 தகுதி தேர்வில் சுமார் ஒன்பது கேள்வி மற்றும் விடைகள் குளறுபடி உள்ளது .அதற்கான விடைகள் ஆட்சேபங்கள் தெரிவித்தும் சரிசெய்யபடவில்லை.கேள்வித்தாள் கடினமாக இருந்தும் 88/89 மதிப்பெண் எடுத்து TRB கேள்வி விடை குளறுபடியால் தோல்வி அடைந்துள்ளனர் . எனவே அதையும் அரசு தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்ய வேண்டும் . பாதிக்கப்பட்டோர் சார்பாக .

    ReplyDelete
  10. ithellam just oru news thaan , but trb ethukum anjatha department, neenga enna thaan pannunalum kandukka maatanga, 88, 89 la irukka ellarukkum posting podanumna innum 10000 per irupanga, ithukellam chance a illa, don't feel, prepare next tet 2014

    ReplyDelete
  11. Neenga pass athanala comment kudukreenga think others,neenga1 mark la fail agiruntha aduvanga kastam therium ok no problem next tet examku especialy for pshycology entha books padiklam nu sollunga saranya sundar

    ReplyDelete
  12. Entha tet kku Bathila 10 maadu or panniya mechalum panakkarana aidalam
    Naa 87 mark pa

    ReplyDelete
  13. hai frnd, naan already posting la iruken, ithula pass agalanalum no problem, last year naanum 88 thaan maths dept. ok va. psychology padikanumna "KALVI MANAVIYAL" by SANTHANAM , intha book padinga

    ReplyDelete
    Replies
    1. Ok Saranya sundar, for English what books?

      Delete
    2. computter science teacher selection eppo sir?

      Delete
  14. hello friends both answers are prepared by expert only. then why controversy answer given by experts. expert expert how they became expert . .

    ReplyDelete
    Replies
    1. Sir Intha Expert than Paper1 la( Maths) la First Oru Answer keyum Ipa Oru Answer keyum Vittuiru

      Delete
  15. கடந்த 2012 தகுதி தேர்வில் தமிழ் மற்றும் உளவியல் கேள்விகளில் ஐந்து கேள்வி விடைகள் தவருதலாக இருந்ததை கண்டு தங்கள் கீ வெளிட்டு ஒருவாரகால அவகாசத்தில் பரிசீலனை செய்வீர்கள் என்ற நம்பிகையில் கடிதம் மூலம் தெரியபடுத்தி இருந்தோம் ஆனால் தங்கள் கவனத்தில் எடுத்துகொள்ளவில்லை. எங்களது கோரிக்கைகள் நிராகரிக்க பட்டது [அதென்ன தற்காலிக விடைகள், இறுதி விடைகள் ,அப்புறம் எதற்கு வல்லுநர் குழு ]. கூடுதலாக சேர்க்க பட்ட மூலதனம், புத்தமதம் போன்ற விடைகள் தவறு என தெரிந்தும் யாருக்காக கூடுதலாக சேர்த்தீர்கள் என தெரியாது .88/89 மதிப்பெண் எடுத்தவர்கள் சுமார் 500 லிருந்து 750 பேர் தான் இருந்திருப்போம். ஆனால் தற்போது அதிகம் பேர் பாதிக்க படுவதால் விடை குளறுபடிகள் இருந்தால் வல்லுநர் குழு மறு மதிப்பீடு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. எங்களுக்கு ஏன் காலஅவகாசம் தரவில்லை .எங்களது கடிதங்கள் பரிசீலிக்க பட்டு இருந்தால் நாங்கள் தேர்ச்சி பெற்று இருப்போம். சுமார் 45 வயதை கடந்த நாங்கள் வேலைவாய்பு அலுவலக மற்றும் கற்பித்தல் அனுபவ சீனியாரிட்டி , அனைத்தையும் இழந்து ,புதிய கல்வி படைத்திட்ட படி படித்து 88/89 எடுக்கிறோம் . மாணவர் நலனில் எந்தவித சமரசமும் கிடையாது என்ற தீர்பிற்க்கு கட்டுபடுகிறோம் .அனால் TRB கேள்வித்தாள் குளறுபடியால் ஒருசில மதிப்பெண் நாங்கள் வாழ்கையை இழக்கிறோம் .வல்லுனர்கள் விடை தங்களது தான் சரி என வாதிடுவார்கள் என்பது தெரியும் இருந்தும் தவறான விடைகள் வல்லுனர்கள் கூறிவிட்டார்கள் என்பதற்காக சரியாகிவிடாது ..
    உதரணமாக[2012] வேறுபாடுகள் அதிகம் உள்ள வகுப்பறையில் –TRBTRB தனியாள் கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல் என சரியான விடையாக கொடுக்க பட்டுள்ளது .தனித்தனி கற்பித்தல் முறைகளுக்கும் தனியாள் கற்பித்தலுக்கும் வேறுபாடு தெரியாதா.தனித்தனி கற்பித்தல் என்பது டால்டன் [Dolton Plan], வினட்காமுறை [Winnetka Plan] போன்ற ஆற்றல் படி வகைபடுத்தி கற்பிக்கும் முறையாகும். ஆதாரம் தமிழகத்தில் அனைத்து உளவியல் நூல்களுக்கும் ஆதாரநூலாக பயன்படுத்த படும் பேராசிரியர் திரு. S.சந்தானம் (முதல்வர் [ஓய்வு] ஆசிரியர் கல்லூரி சைதை) கல்வி உளவியல் அடிப்படைகள் .பக்கம் 487.இவருடைய உளவியல் நூல் ஆசிரியர் பட்டய பயிற்சி பாடநூலாக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது
    அனைத்தையும் கூற இடம் இல்லை .
    . TRB செய்யும் தவறு நிர்வகிக்கும் அரசை போய் சாரும் என்பதை தமிழக அரசு அறியும்.எல்லாவற்றிற்கும் நடவடிகை எடுக்கும் தமிழக அரசு இதில் கருத்தில் கொள்ளாதது ஏன். நீதிமன்றத்தில் நல்ல நீதிஅரசர் இல்லாமலா போய்விடும்

    ReplyDelete
    Replies
    1. Understood your agony as we are the candidates having more than fifteen years experience and seniority. Eventhough we pass the tet exam, we will have to face the weightage problem. Due to weightage, we deginitely loose our life. If we are weeping crying, the trb and government wil not consider. We should fight for getting weightage for our seniority and teaching experience. Atleast the teaching experience must be given respect.

      Delete
  16. muthalil oru questionku oru answer than irukka vendum entru trb ninaikka vendum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி