உலக செஸ் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

உலக செஸ் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு.


சென்னையில் துவங்கிய உலக அளவிலான செஸ் போட்டியில், ஈரோடு மாவட்டத்தின் சார்பில் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு பள்ளி மாணவர்களின்
திறமையும், ஆற்றலையும் வலுப்படுத்தவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், ஏழு முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.பள்ளிகளில் செஸ் விளையாட்டு மேம்பாட்டுக்காக, 39.47 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது.பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, குறுமைய அளவிலும், குறுமைய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, யூனியன் அளவிலும், யூனியன் அளவில் வெற்றி பெற்றவர்கள், கல்வி மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் வருவாய், மண்டல அளவில் வெற்றி பெற்று, உலக செஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுவர். ஈரோடு மண்டலத்தில் மட்டும், 24 மாணவ, மாணவிகள் உலக செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.சென்னையில் நடக்கும் செஸ் போட்டியில், 24 மாணவர்களும் பங்கேற்று விளையாடியதாக, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சித்தையா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி