மீண்டும் பணி வழங்கக்கோரி தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.பணிநீக்கம்
செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும்என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த இரண்டு மாதங்களாகவே பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல் துறையினர் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர். ஆனால் தங்களின்எதிர்காலம் இருளில் மூழ்கிவிட்டதாகவும், உடனடியாக அரசு தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு எழும்பூரில் உள்ள கோவிலில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பாக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும், விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்று உறுதிமொழி அறிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி