வேலாயுதம்பாளையம்: டி.என்.பி.எல்., நிறுவனத்தினருக்கும், அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவை வளர்க்கும் விதமாக,
நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ப்ளஸ் 1 பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு, காகித ஆலையைச் சுற்றிப்பார்க்க "கல்விச் சுற்றுலா" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.அதன்படி, நேற்று முன்தினம் காலை, 10.30 மணி முதல், மதியம் 2.30 மணி வரை, காகித ஆலையை சுற்றுபார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரிடம் காகிதம் தயாரிப்பது பற்றிய விளக்கமும், காகித நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன் கூறினார்.அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைத் துறையைச் சார்ந்த பேராசிரியர் ஞானஜோதி திறன் மேம்பாட்டு வகுப்பு நடத்தினார். இந்த ஆண்டில் புகளூர், நொய்யல், புன்னம், வாங்கல் பகுதியில் அமைந்துள்ள, ஆறு அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.வாரந்தோறும் இச்சுற்றுலாவிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் வந்து செல்ல ஏதுவாக பேருந்து வசதி மற்றும் ஆலை வளாகத்தில் தேநீர் வசதி மற்றும் மதிய உணவும் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலாவின் இறுதியில் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்களும் நினைவுப் பரிசாக வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி