கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியக்குடும்பம் உருவானது. அப்போது ஐசான் வால்நட்சத்திரம் உருவானது. இந்த நட்சத்திரம் ப்ளூட்டோவை தாண்டி
பல லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் வியாபித்துக்கிடக்கும்"ஊர்த்" எனப்படும் மேகக்கூட்டங்கள் மத்தியில் உள்ளது. "ஐசான்" வால்நட்சத்திரம் உருவான பின், முதல் முறையாக சூரியன் அருகே வருகிறது.கடந்த சில நாட்களாக இந்த வால்நட்சத்திரத்தை ஆங்காங்கே கோளரங்கங்கள், அறிவியல் அரங்கங்களில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டு வந்தனர். முதல் முறையாக தற்போது தான்பார்வைக்கு தெரியும்படி வந்துள்ளது. சூரியனை உரசியபடி ஐசான் வால்நட்சத்திரம் இன்று காலை கடக்கிறது.வழக்கமாக 400 மீட்டர் விட்டம் மட்டுமே வால் நட்சத்திரங்கள் இருக்கும். அவ்வாறு சிறிய விட்டம் கொண்ட நட்சத்திரங்கள் சூரியனை கடக்கும்போது ஆவியாக சிதறிசாம்பலாகிவிடும். ஐசான் வால்நட்சத்திரம் 5 கி.மீ., விட்டம் கொண்டுள்ளது. எனவே,சூரியனை கடந்து செல்லும் என வான் நோக்கு அறிஞர்கள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி