10, பிளஸ் 2 தேர்விற்கு 200 புதிய மையங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2013

10, பிளஸ் 2 தேர்விற்கு 200 புதிய மையங்கள்.


அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கான 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு உள்ளது. மாணவர்களுக்கு இட நெருக்கடி போன்ற பிரச்னைகளை தவிர்க்க,
ஒரு மையத்தில் 400 மாணவர்கள் வரை மட்டுமே தேர்வு எழுத வேண்டும். 20 பேர் (20க்கு20 அளவு) எழுதும் அளவில் தேர்வறையை பிரிக்க வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடந்த ஆண்டை விட, இந்தாண்டு 10 முதல் 20 மையங்கள் வரை அதிகரித்திருப்பது குறித்தும்,அதற்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது பற்றி இணை இயக்குனர்கள் விவாதித்தனர். இதன்படி, மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட புதியதேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி