எழுத்தறிவில்லாத சிறுமியருக்கு கணினி வழங்க பீகார் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2013

எழுத்தறிவில்லாத சிறுமியருக்கு கணினி வழங்க பீகார் திட்டம்.


எழுத்தறிவில்லாத சிறுமியர், பெண்கள் கல்வி அறிவு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிய கம்ப்யூட்டர்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.பீகார் மாநில தகவல் தொழில்நுட்ப
துறை அமைச்சர், ஷாகித் அலி கான் நிருபர்களிடம் கூறியதாவது: வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களில், எழுத்தறிவில்லாத, பெண்கள், சிறுமியருக்கு, கல்வி அறிவை புகட்டும் நோக்கில், அங்கன்வாடி மையம் மற்றும் வசுதா கேந்திரா போன்ற அமைப்புகள் மூலம், இரண்டு மாதம் பயற்சி அளிக்கப்படும். அதன் பின், அவர்களுக்கு, எளிதான தேர்வு நடத்தி, பயனாளிகள் தேர்ந்து எடுக்கப்படுவர். அவர்களுக்கு, சிறிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.இதுதொடர்பாக, முதல்வர், நிதிஷ்குமாருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இதற்கு விரைவில் அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும். இவ்வாறு, அவர் கூறினார். அங்கன்வாடி மையம் என்பது 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அறிவு வழங்குவது.வசுதா கேந்திரா, என்பது, பீகார் மாநிலத்தில் மட்டும் அமைக்கப்பட்ட, பொது சேவை மையம். இதன் மூலம், மக்களுக்கு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்று வழங்குதல், இணையதள சேவை ஆகிய பணிகள் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி