முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2013

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள்சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன்வழக்கு விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் மீண்டும் நாளை விசாரணக்கு வரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நாளை
காலையில் விசாரணைநடைபெறுவதுகுறித்த தகவல் உறுதி செய்யப்படும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் கவுன்சிலிங் ?

    2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்
    அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம்
    முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப,
    அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என
    கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக
    அரசு மேல்நிலைப்பள்ளிகளில்அனைத்து பாடப்பிரிவிலும்,
    5 ஆயிரம்முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    2013-14 கல்வியாண்டின்பொதுத்தேர்வுக்கு முன்பாகவே
    காலியிடங்களை நிரப்பபள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
    ஏற்கனவே,முதுகலை ஆசிரியர்பதவி உயர்விற்கு தகுதியான
    (பட்டதாரி ஆசிரியர்)பட்டியல் தயாரித்த நிலையில், தற்போது,
    அப்பட்டியலில்திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து,
    அனுப்பசி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம்
    உத்தரவிட்டுள்ளது.இப்பட்டியல் இறுதி செய்த பின்,
    அடுத்த வாரத்தில் முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு "கவுன்சிலிங்'
    தேதி அறிவிக்கப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிகாரி ஒருவர் கூறுகையில்,
    ""மாநிலம் முழுவதும்உள்ள 5 ஆயிரம் காலியிடத்தில்
    2 ஆயிரம் முதல் 3ஆயிரம் வரை, பட்டதாரியில்இருந்து
    முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
    எஞ்சியஇடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு நிரப்ப
    நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.
    வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம்
    நிரப்புவதில் சிக்கல் இருந்தால், தள்ளிப்போக
    வாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வித்துறையில்
    ஆலோசனைப்படி, 2014-15 கல்வியாண்டின்
    துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
    பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக
    இருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்த
    நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி