மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: டிச.16-ல் தொலைதூரக் கல்வித் தேர்வுகள் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2013

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை: டிச.16-ல் தொலைதூரக் கல்வித் தேர்வுகள் துவக்கம்.


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வு இம்மாதம்16-ல் தொடங்குகிறது என கோவில்பட்டி கல்வி மைய
ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில்கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் டிச.16முதல் இளங்கலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான மொழித் தேர்வுகளும், 20-ம் தேதி முதல்31-ம் தேதி வரை இளங்கலை முதல்,இரண்டாம்,மூன்றாம் ஆண்டுகளுக்கான பிரதான தாளுக்குரிய தேர்வுகள் நடைபெறுகிறது. இளங்கலை நூலக அறிவியல் மாணவர்களுக்கு இம்மாதம்16-ம் தேதி முதல்21-ம் தேதி வரை,முதுகலைத் தேர்வுகளும்16-ல் தொடங்குகிறது.

எம்.பி.ஏ.,எம்.சி.ஏ,.பி.ஜி.டி.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கு இம்மாதம்16முதல்28-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வுகள் குறித்த விரிவான கால அட்டவணையை கல்வி மையத்தில் நேரிலோ,தொலைபேசி மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மாணவர்கள் முகவரிக்கு பல்கலைக் கழகம் மூலம் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள் தங்கள் அடையாள அட்டையுடன் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்.அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி