புதிய ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 17 இடங்கள்: பி.இ.டி., ஆசிரியர் அதிருப்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2013

புதிய ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 17 இடங்கள்: பி.இ.டி., ஆசிரியர் அதிருப்தி.


நடப்பு கல்வி ஆண்டில் நியமிக்கப்பட உள்ள, 3,525 ஆசிரியரில், வெறும் 17 இடங்கள் மட்டும் உடற்கல்வி ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பி.இ.டி., ஆசிரியர் பணியிடங்களை புறக்கணிக்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை
எடுத்திருப்பதாக, உடற்கல்வி ஆசிரியர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளை தவிர்த்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மட்டும் 16,328 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு பள்ளிக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை கூட இல்லாமல் 3,700 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக இந்த ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் சிலர் கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டுக்கான புதிய நியமன பட்டியலில், தொடக்க கல்வித் துறையில், உடற்கல்வி ஆசிரியருக்கு வெறும் 17 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வித் துறையில் ஒரு பணியிடம் கூட அளிக்கவில்லை. தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியரின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றன.தற்போது, ஒதுக்கப்பட்டுள்ள, 17 இடங்கள் "யானை பசிக்கு சோளப்பொரி" போல் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:
மொத்தம், 250 மாணவருக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், கூடுதலாக, 180 மாணவர் இருந்தால், இன்னொரு ஆசிரியர் இடமும் வழங்கலாம் என விதிமுறையில் உள்ளது. மற்ற ஆசிரியர் பணியிடத்துடன் ஒப்பிடுகையில், உடற்கல்வி ஆசிரியர் எண்ணிக்கை குறைவு தான். ஆனாலும், புதிய பணியிடங்களை அனுமதிப்பதில், அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி