கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2013

கூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: நடப்பாண்டில் புது ஆசிரியர்கள் 18,500 ஆக உயர்வு.


நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து,
தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கடந்த கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாதபணியிடங்கள் என, 15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாகநடந்து வருகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள்குறித்த பட்டியலை, பள்ளி கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது. பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர், 694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர்.

இதை, அரசு ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை பிறப்பித்துள்ளது. கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர், 380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது. மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர், 887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525 பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள், நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும், அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 2,800 முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன் சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன. மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

30 comments:

  1. Hi all of u good morning. All tet passed canditates don't worry. All r get posting. Thirujai

    ReplyDelete
  2. Hi tet CV eppappa? ethavathu teriyuma?

    ReplyDelete
  3. Trb madam says still some cases r there pending thats why we r waiting for tet cv

    ReplyDelete
  4. All cv attended(last cut off additional list) pg candidates would get job(either as 1 list or 2 list) due to increase of 809 pg posts. So total pg vacancy wil b increased to 2881 + 809=3690 which includes Municipality+ADW+MBC welfare school Pg posts also.

    Pg tamil+his +commerce revised result & cv list expected soon.

    After cv of above 3 subjects-shortly all pg sub final provisional sel list would b published.

    In between this BT to PG shall b conducted (but one sitting writ pending up to jan 2)

    Anyhow TN govt & TRB wil take necessary steps to appoint above said posts within pongal.

    (release of TET results & cv process would b conducted along with or after pg trb appointment process)

    ReplyDelete
    Replies
    1. tet ற்க்கு மறுமதிப்பீடு இல்லை, அதனால் pg & tet பணிநியமனம் 2 ம் ஒன்றாகவே நடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது ...PG trb பிரச்சினை முடிவுக்கு வந்தால் பணிநியமனம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது,,,,

      Delete
    2. this additional recuritment by promotion or from exam written candidates?

      Delete
    3. siranjivi sir,
      that pending writ petition regarding which subject?

      Delete
  5. Mr.Srinjivi sir give ur cantact number

    ReplyDelete
  6. how many vacancy for science paper2? how many teachers pass in science paper2?

    ReplyDelete
  7. Athu trb key theyrium.published panna than yellarukum theyrium

    ReplyDelete
  8. Very good news. Tet and pg selected candidates pl wait for some time. Additional 3500 vacancies will help the pg candidates those who r not selected because of scored one or two marks less than cut off. All tet and pg candidates sould urge the govt to appoint more staffs for trb. Wish u all the best. And also pl thank thehonourable judge Nagamuthu who gave good judgement in time.

    ReplyDelete
  9. Thang u tn govt.pls fill all the post
    Tet cantitates so happy

    ReplyDelete
  10. please fill the post quickly

    ReplyDelete
  11. good news for all passed candidates.... when cv?

    ReplyDelete
  12. THIS IS DINAMALAR NEWS, KALVIS SIETHI SHOULD CONFIRM,WHETHER IT IS TRUE OR NOT.

    ReplyDelete
  13. உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வுவாரியம் முதுகலைத்தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது. நீதிமன்ற உத்தரவு நாளை (16.12.13 ) கிடைக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமைக்குள் தேர்வு முடிவினை வெளியிட்டுவிடுவோம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ReplyDelete
  14. siranjeevi sir tamil cutoff evlo varum I got 91 bc in tamil pg trb can I get any chance

    ReplyDelete
    Replies
    1. Tamil major Cut off will fall below 95 .What is the highest score in your friends circle?

      Delete
  15. Now paper2 vacancy is 11922 979=12901. That s nearly 13000, bt passed is 14000 only. So Dnt wrry p2 passed candidates. More r less all p2 passed get job surely.

    ReplyDelete
    Replies
    1. sorry to say this tamilil 2000 vacancy irunthu 3000 pass pannyirunthal eng il 3000 vacancy irunthu 4ooo pass panniyirunthal 1000??l? mat il 3000 vacancy irunthu 4500 pass panniyiruntha sub wise vacancy poruthu than eng il quota wise 1000 bc vacancy kku 1500 per pass panniyirunthal high weightage ullavargalukku mattum posting likewise mbc sc st oc weightage plays an important role

      Delete
    2. you are absolutely correct. getting job will be only depends on the no. of vacancies and no. of passed candidates in each of the subjejct. Otherwise, the judgement of ours may go wrong. Atleast, TRB can announce the no. of passed candidates in each subjects.

      Delete
  16. Sir I'm dhasaradhan
    how many vacancies in paper1 ?
    I got 102 n p1
    nd Mbc ,seniority 2009.
    can I get job?

    ReplyDelete
    Replies
    1. kandipa kedaikumnu nambunga.................. andha nambikaiyeeeee job kedaika vaikum frnd

      Delete
    2. exactly correct

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி