பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன் லைனில் பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2013

பிளஸ் 2 மாணவர்கள் விவரம்: டிச., 10ல் ஆன் லைனில் பதிவு.


பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும், மாணவர்களின் விவரங்கள், வரும், 10ம் தேதி, ஆன் லைனில் பதிவு செய்யப்படுகின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு, 2014 மார்ச், 3ல் துவங்குகிறது. இந்தத் தேர்வை எழுதும்,
மாணவர்களின் பிறந்த தேதி, தமிழ், ஆங்கிலத்தில் பெயர் எழுதும் முறை, பெற்றோர் பெயர், அங்க அடையாளங்கள், உயரம், ரத்த வகை உட்பட, 20க்கும் மேற்பட்ட விவரங்கள், பள்ளிகளில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன.இந்த விவரங்களை, மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் வண்ண புகைப்படத்துடன், கம்ப்யூட்டரில் பதியும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது. மாணவர்கள் தங்கள் பெயரில், எழுத்து திருத்தம் உட்பட, வேறு ஏதாவது மாற்றம் இருந்தால், அவற்றை, வரும், 9ம் தேதிக்குள், அந்தந்த பள்ளிகளில் திருத்தம் செய்து கொள்ளலாம். சரியான விவரங்கள் அடங்கிய பட்டியல், வரும்,10ம் தேதி, ஆன் லைனில் ஏற்றப்படுகிறது. இதற்கு பின், எவ்வித திருத்தமும் செய்ய இயலாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி