நெல்சன் மண்டேலா மரணம் 5 நாட்கள் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2013

நெல்சன் மண்டேலா மரணம் 5 நாட்கள் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்படும் தமிழக அரசு அறிவிப்பு.


தமிழ்நாடு பொதுத்துறை முதன்மை செயலாளர் ஜிதேந்திரநாத் ஸ்வைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தலைவரும்,
பாரத ரத்னா விருது பெற்றவருமானநெல்சன் ஆர்.மண்டேலா கடந்த 5–ந் தேதி மரணமடைந்துள்ளார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, டிசம்பர் 6–ந் தேதி முதல் 10–ந் தேதிவரை தமிழக அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில், தமிழகம் முழுவதும் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இதுசம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி