தமிழகத்தில்,ஆசிரியர் தகுதியை உறுதி செய்யும் விதத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2012ல் தகுதி காண் தேர்வு நடத்தப்பட்டது. இதில், அந்தந்த மாவட்டத்தில், தேர்வினை எழுதி, தேர்ச்சி பெற்ற
பி.எட்., பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்களுக்கு, அந்தந்த சி.இ.ஓ.,க்களே சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வுக்கான சான்றுகளை வழங்கியுள்ளனர். அதேநேரம், அந்தந்த மாவட்டங்களில் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்காமல், சென்னையில், 2013 ஜூலை மற்றும் அக்டோபரில், சான்று சரிபார்ப்பு பணி நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், டிச.,31 வரை, சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தேர்வு சான்று வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்கள், தேர்வு சான்றுகளை, சென்னை, அசோக்நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில், நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம், என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி