டி.ஆர்.பி AP POST :பணி அனுபவத்தை கணக்கிட சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2013

டி.ஆர்.பி AP POST :பணி அனுபவத்தை கணக்கிட சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை.


"டி.ஆர்.பி., மதிப்பெண்ணுக்கு, ஆசிரியப் பணி அனுபவத்தை முழுமையாக கணக்கிட வேண்டும்,' என, தமிழ்நாடு சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் கதலி நரசிங்க பெருமாள்,
தலைவர் அற்புதராஜ், செயலாளர் நடராஜன் கூறியதாவது:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டி.ஆர்.பி.,) சமீபத்திய குளறுபடியால், படித்த, தகுதியான, அனுபவம் வாய்ந்த கல்லூரி ஆசிரியர்களின் எதிர்காலம் பாழாகிறது. ஆசிரியப் பணியின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்திற்கும் 2 மதிப்பெண் வீதம், அதிகபட்சமாக ஏழரை ஆண்டுகளுக்கு 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. 2007 மற்றும் 2010ல் உதவி பேராசிரியர் நியமனத்தில் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது.தற்போது, விதியை மாற்றியுள்ளனர். உதாரணமாக ஒருவர் 15 ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்தாலும், நான்காண்டுகளுக்கு முன் "பி.எச்டி.,' முடித்தால், அந்த ஆண்டிலிருந்து தான், ஆசிரியப் பணிக்கான அனுபவத்தை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்குகின்றனர்.

அரசு வேலை கிடைக்குமென நம்பி, சுயநிதிக் கல்லூரிகளில் அனுபவத்திற்காக பணிபுரிபவர்கள் பாதிக்கப்படுவர்.நவ., 25 முதல், இரண்டு கட்டங்களாக, மூன்று கல்லூரிகளில் 1093 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் மூலம் சான்றளிக்கப்பட்ட, பணி அனுபவத்தை கணக்கில் கொள்ளாமல், புதிய முறையை பயன்படுத்துகின்றனர். இதனால் விண்ணப்பித்த, 17ஆயிரம் பேரில் 80 சதவீதம் பேருக்கு, உரிய மதிப்பெண் கிடைக்கவில்லை. பணி அனுபவத்தை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள டி.ஆர்.பி.,க்கு, அரசு வழிகாட்ட வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி