24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2013

24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்.


ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை பயன்படுத்தி அவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாராவது பயணத்தை மேற்க்கொள்ள முடியும். இதற்காக குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ரயில் நிலைய மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களது டிக்கெட்டுகளையும் மாற்றிக் கொள்ள இற்த திட்டம் அனுமதிக்கின்றது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும் இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்ல முடியாத போது வேறொரு ஊழியரின் பெயரில் அவரது டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம்.பயணம் செய்ய உள்ள ஊழியரின் உயர் அதிகாரி மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரின் ஒப்புதலோடு வேறொரு மாணவருக்கு மாற்றிக் கொள்ள முடியும். மாணவர்களின் டிக்கெட்டுகளை மாற்ற ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி