இன்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைப்பு, அடுத்த கூட்டம் 26ஆம் தேதிக்கு மீண்டும் கூடும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2013

இன்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஒத்திவைப்பு, அடுத்த கூட்டம் 26ஆம் தேதிக்கு மீண்டும் கூடும்.


இன்று சென்னையில் திரு.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற டிட்டோஜாக்கூட்டம் மாலை 4.00மணி வரை நீடித்தது எனவும், அனால் இன்றைய கூட்டத்தில் பங்குபெற்ற சங்கங்களுக்கு இடையே
முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ஒரு மாபெரும் பேரணி நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது, அந்த கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கடுத்தப்படியாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தி அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் எனவும், இதற்கு அரசு செவி சாய்க்கவில்லையெனில் உடனடியாக டிட்டோஜாக் கூடி வேலை நிறுத்தம் அல்லது அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கலாம் என்று பெரும்பாலான சங்கங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால் முன்னணி சங்கம் ஒன்று மட்டும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக வேலை நிறுத்தம் செய்வோம் என்றும், நாங்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்திவிட்டோம் என்றும், இனி நடத்தமாட்டோம் என்றும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து இந்த கூட்டத்தில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இனி வரும் கூட்டத்தில் சுழற்சி முறையில் அனைத்து சங்க கட்டடத்தில் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி