ஐகோர்ட்டில் 268 பணியிடம்: பிப்., 23ல் எழுத்து தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2013

ஐகோர்ட்டில் 268 பணியிடம்: பிப்., 23ல் எழுத்து தேர்வு.


சென்னை உயர்நீதிமன்றத்தில், 268 பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பிப்ரவரி 23ல் நடக்கிறது.சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளின் நேர்முக உதவியாளர் பணியிடங்கள், 57;
நேர்முக உதவியாளர்கள், 7; உதவியாளர்கள், 37; டைப்பிஸ்ட், 139; கம்ப்யூட்டர் ஆபரேட்டர், 28 என, மொத்தம், 268 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் மட்டுமே, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள், இம்மாதம், 20ம் தேதி. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு, பிப்ரவரி, 23ம் தேதி நடக்கிறது. தேர்வு குறித்த முழு விவரம், டி.என்.பி.எஸ்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி