விடுதிகளுக்கு வெளியே அறை எடுத்து தங்கியுள்ள மாணவர்கள் விவரத்தை அளிக்க வேண்டும்" என்று கல்லூரிகளை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.சென்னையில் வாடகை வீடுகளில்
குடியிருப்போர் குறித்த விவரங்களை அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். அதற்காக காவல் நிலையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் காவல் துறையினர்அறிவித்தனர்.இந்த நிலையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில், விடுதிகளில் தங்காமல் வெளியில் தங்கியுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று, அந்தந்த கல்லூரிகளுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து, இதுகுறித்த சுற்றிக்கையையும் அளித்துள்ளனர்.இதுகுறித்து கல்லூரி முதல்வர்கள் சிலர் கூறுகையில்,"கடந்த ஆண்டும் இதுபோல ஒரு பட்டியலை கேட்டனர். வெளியில் தங்கியுள்ள மாணவர்களின் நடவடிக்கைகளுக்கு, கல்லூரிஎப்படி பொறுப்பேற்க முடியும்? மாணவர் அளிக்கும் விவரம் சரியாக உள்ளதா, இல்லையாஎன்பது எங்களுக்கு எப்படி தெரியும்?" என்றனர்.மாணவர்களோ, "நாங்கள் தங்கியுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் ஏற்கனவே எங்களிடம் புகைப்படம், அடையாள அட்டை நகல், பெற்றோர் தொலைபேசி எண்கள் போன்றவற்றை பெற்றுக் கொண்டு, உரிய முன்தொகை வாங்கிக் கொண்டுதான் எங்களுக்கு அறையே தருகின்றனர். இதில் கல்லூரிகள் வழியாகவும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என புலம்பினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி