(கோப்புப் படம்)
சென்னையில் அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 27-க்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்று காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகிகளுடன் பாதுகாப்பு
குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது.சுமார் 200 பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூடுதல் காவல் ஆணையர்கள் தாமரைக்கண்ணன், ராஜேஷ்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கினர்."சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி 27-ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக பொருத்த வேண்டும்.மாணவர்களை ஏற்றி வரும் வாகன ஓட்டுநர்களின் முழுவிவரங்களை பள்ளி நிர்வாகம் வைத்திருக்க வேண்டும்" என்பன உட்பட பல பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காவல் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி