ஆதார் அட்டை பணி தீவிரம் : 31ம் தேதிக்குள் முடிக்க முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2013

ஆதார் அட்டை பணி தீவிரம் : 31ம் தேதிக்குள் முடிக்க முடிவு.


தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு இந்தியா முழுவதும்
ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை முறையை 2009ம் ஆண்டு கொண்டு வந்தது. முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 35 மாவட்டங்களில் இத்திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி ஒவ்வொரு கிராமங்களிலும் ஆதார் அட்டைக்கான பணிகள் நடைபெற்று வந்தன. 5 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.74 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்படும்என தெரிவிக்கப்பட்டது. இதுவரை 4.71 கோடி மக்களுக்கு அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், 3.53 கோடி மக்களுக்கு அடையாள அட்டைவழங்கப்பட்டுள்ளது. சென்னை யில் மட்டும் 52.7 சதவீதம் மக்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மற்ற 31 மாவட்டங்களில் 60 முதல் 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் சராசரியாக 70 சதவீத மக்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆதார் அட்டையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளது. தனிநபரின் புகைப்படம், கைவிரல்களின் ரேகைகள், கண் கருவிழி பதிவுகள், ஆகியவை உள்ளடக்கப்படுகின்றன. அனைத்து தகவல்களையும் சேகரித்து இறுதியாக ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அடையாள அட்டை மூலம் அரசின் சலுகைகள், மற்றும் மானியங்கள், வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பொதுமக்களிடையே இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பி வந்தது. மத்திய அரசு மக்களை கட்டாயப்படுத்துவதாகவும், ஆதார் எண்அவசியமில்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் இது சம்பந்தமாக பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதார் அட்டைக்காக பொது மக்களை கட்டாயப்படுத்த கூடாது என தீர்ப்பளித்தது.தமிழகத்தில் ஆதார் எண் வழங்கும் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளது.ஆனால், தமிழகத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் முறையாக ஆதார் அட்டை பணிகள் தொடங்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறது.

எக்ஸ்ட்ரா தகவல்:

ஆதார் அட்டை பணி அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 88.8 சதவீதம் முடிந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 81.9 சதவீதமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 78.78 சதவீதமும் பணிகள் முடிந்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி