மாநகராட்சிப் பள்ளிகள்.. இதுவரை 62 பள்ளிகள் 'குளோஸ்'! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2013

மாநகராட்சிப் பள்ளிகள்.. இதுவரை 62 பள்ளிகள் 'குளோஸ்'!


கிரை சர்வே சிறார் உரிமைகளும் நீங்களும் Child Rights and You (CRY) என்ற அமைப்பு நடத்திய சர்வேயில்தான் இது தெரிய வந்துள்ளது.

மூடவில்லை... மேம்படுத்துகிறோம் ஆனால்
அரசோ இந்த பள்ளிகள் மூடப்படவில்லை. மாறாக மேம்படுத்தப்படுகின்றன என்று கூறுகிறதாம். அதாவது மூடல் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவதில்லையாம்.தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்துமே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளாகும்.

அது என்ன மேம்பாடு... அதாவது ஒரு தொடக்கப் பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளியை இணைத்து விடுகிறார்கள். இணைத்து விட்டு ஒரு பள்ளியை மூடி விடுகிறார்கள்.இன்னொரு பள்ளியை மட்டும் இயங்க வைக்கிறார்கள். இதைத்தான் அரசு மேம்படுத்துவது என்று கூறுகிறதாம். இருக்கின்ற பள்ளியை அப்படியே மேம்படுத்துவதில்லை. மாறாக ஒரு தொடக்கப் பள்ளியை இன்னொரு பள்ளியுடன் இணைத்து ஒரு பள்ளியை மூடி விடுகிறது அரசு.ஒரே டீச்சரே பல வகுப்புகளுக்கு பல மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரே டீச்சரே பல வகுப்புகளுக்கும் செல்லும் நிலை உள்ளது. மேலும் ஒரே டீச்சரே பல பாடங்களையும் எடுக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்திற்கும்தனித் தனியாக ஆசிரியர்கள் இருப்பதால் அங்கு தரம் நன்றாக இருப்பதாக பெற்றோர்கள் கருதுகிறார்தனியார் பள்ளிகள் மட்டும் என்ன ஒஸ்தியா... ஆனால் உண்மையில் தனியார் பள்ளிகளில்தான் பல மோசமான விஷயங்கள் உள்ளன என்பது உண்மை தெரிந்தவர்கள் கருத்தாகும். அது நிறையப் பேருக்குப் புரிவதில்லை.

அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் தியாக மனப்பான்மையுடன் கூடிய ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். நன்றாகவும் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் கட்டடம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியி்ல்லை என்று உண்மையில் பெற்றோர்கள்தான் தேவையில்லாமல் பணத்தைக் கொட்டி தனியார் பள்ளிகளில் தங்களது பி்ள்ளைகளை முடக்குகிறார்கள் என்பது இவர்களது வாதம்.எது எப்படியோ பள்ளிகளை மூடுவது என்பது கல்விக் கண்ணை நாமே குருடாக்கிக் கொள்வது போலத்தான்... அரசு கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி