ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை வழங்குக! : தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2013

ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியத்தை வழங்குக! : தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தஞ்சை பூக்காரத்தெரு கணேச வித்யாலாயாபள்ளியில் நடைபெற்றது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாவட்டச் செயலாளர் வீ.க.நீலகண்டன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் உ.சுப்பிரமணியன், தமிழக ஆசிரியர் கூட் டணி மாவட்டச் செயலா ளர் சி.பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ந.குருசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ச.குமார் வரவேற்புரையாற்றினார்.எம்.ஜான்போஸ்கோ சு.ரெ. பாலமுருகன், கோ. முருகன்,ச.சிவகுமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநிலப் பொதுச்செய லாளர் இரா.தாஸ் சிறப்புரையாற்றினார். ஜி.அருள், சி.திருமேனி, அ.எழிலரசன், நாக.சந்திரன், த.பத்திரநாத் ஆகியோர் உரையாற்றினார்.

வி.சீனுவாசன் நன்றியுரை வழங்கினார். ஆறாவது ஊதியக் குழுவில் நடுவணரசு இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள ஊதியத்தை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.01.2006முதல் தமிழக அரசும் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய் வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலை வாய்ப்பகமுன்னுரி மைப்படி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி