சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம் வகுப்புத் தேர்வு: திறந்த புத்தக தேர்வு முறைக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2013

சி.பி.எஸ்.இ. 9, 11-ஆம் வகுப்புத் தேர்வு: திறந்த புத்தக தேர்வு முறைக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு.


சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. வரும் மார்ச் மாதம் நடைபெறும்
ஆண்டுத் தேர்வில் இந்தப்பிரிவுக்காக கூடுதலாக 30 நிமிஷங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் டி.டி.சுதர்சன ராவ் கூறினார். வெறுமனே மனப்பாடம் செய்யும் கல்விமுறைக்கு மாற்றாக மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் வகையில் திறந்த புத்தகத் தேர்வு முறையை சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. ஒன்பதாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும், பிளஸ் 1 வகுப்பில் புவியியல், பொருளாதாரம், உயிரியல் ஆகியப் பாடங்களிலும் இது அறிமுகம் செய்யப்படுகிறது.திறந்த புத்தக தேர்வு முறை பிரிவுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது.

தேர்வின்போது இந்தப் பிரிவுக்கான பல பதில்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டுவிடும். கேள்விகளுக்குத் தகுந்தபடி சரியான பதில்களை அவர்கள்எழுத வேண்டும். கேள்விகள் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இடம்பெறும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தில் 9, 11 ஆம் வகுப்புகளில் திறந்த புத்தக தேர்வு முறையை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என டி.டி.சுதர்சன ராவ் கூறினார்.வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்: பிளஸ் 1 வினாத்தாள் மாற்றம் தொடர்பாகபள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அமைப்பு செவ்வாய்க்கிழமை (டிச.10) சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன் விவரம்: பிளஸ் 1 வகுப்பில் திறந்த புத்தக தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையிலேயே நடைபெறும். இந்தப் பாடங்களில் திறந்த புத்தக தேர்வுமுறை என்ற பிரிவு மட்டும் கூடுதலாக இடம்பெறும். அந்தப் பிரிவுக்கு தலா 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றவாறு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இந்தப் பகுதிக்குரிய விடைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வினாக்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.பிளஸ் 1 வகுப்புக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பும் இந்தச் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கும் இதேபோன்ற வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறைக்கு கிடைக்கும் வரவேற்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றைப் பொருத்து பிற வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட வேண்டும் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி